அந்தி மயங்கும் வேளை..
ஆர்பாட்டம் அடங்கிய
அலையின் கரை
அழகாய் தவழும்
மஞ்சள் நிலவு
கண்களை திண்றது...
வெட்டிய மின்னலாய்
என் ரசனைகளை
உடைத்துக்கொண்டு
நடந்து வந்த நிலவு
நேரம் என்னங்க?
அம்சமான பார்வை
அள்ளி வீசிய புன்னகை
அழகாய் அணிந்த சுடிதார்
கொள்ளை கொள்ளும் அழகு
இத்தனைக்கும் நடுவே
கடிகார முட்கள்
நின்று விட்டதாய் உணர்வு
மீண்டும் அந்த
இனிய குரல்தான்
என்னை மீட்டுத் தந்தது
நேரம் சொன்னேன்
பறந்து போனது மனது
அவளோடு
இன்னமும் தேடுகிறேன்
அந்த கரையின் ஓரம்
அவள் வருவாள் என்று
ஞாயிறு தோறும் தவறாமல்
நான் வருகிறேன்
அந்த அற்புத நிலவை
இன்னமும் காணவில்லை
தளரவில்லை
காத்திருக்கிறேன்...
ஆர்பாட்டம் அடங்கிய
அலையின் கரை
அழகாய் தவழும்
மஞ்சள் நிலவு
கண்களை திண்றது...
வெட்டிய மின்னலாய்
என் ரசனைகளை
உடைத்துக்கொண்டு
நடந்து வந்த நிலவு
நேரம் என்னங்க?
அம்சமான பார்வை
அள்ளி வீசிய புன்னகை
அழகாய் அணிந்த சுடிதார்
கொள்ளை கொள்ளும் அழகு
இத்தனைக்கும் நடுவே
கடிகார முட்கள்
நின்று விட்டதாய் உணர்வு
மீண்டும் அந்த
இனிய குரல்தான்
என்னை மீட்டுத் தந்தது
நேரம் சொன்னேன்
பறந்து போனது மனது
அவளோடு
இன்னமும் தேடுகிறேன்
அந்த கரையின் ஓரம்
அவள் வருவாள் என்று
ஞாயிறு தோறும் தவறாமல்
நான் வருகிறேன்
அந்த அற்புத நிலவை
இன்னமும் காணவில்லை
தளரவில்லை
காத்திருக்கிறேன்...