இலைகளுக்குள் மறைந்த
அரும்புகளின் சுவர்களுக்குள்
உதித்த மலர்கள்
வண்ணச் சித்திரங்களாய்
மின்னும் அழகு
மலர்களுக்குள் மகரந்தம்
மறைத்துவைத்து
வண்டுகளுக்கு சேதி
சொல்லி அனுப்பி
மகரந்தம் காவி வண்டு
மலர்களிற்கு மோட்சம்
கொடுக்கும்
மகரந்த சேர்க்கை
முடிவில்
கனியொன்று காத்து நிற்கும்
காத்திரமாய் படைத்துவிட்ட
இறைவன் பெரியவனே...
அதனால் தானோ
இறைவன் பாதங்களில்
மன்டிகொள்கின்ற
மலர்கள் ஆகினவோ..