சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

குடும்பம்


அன்பில் உறைந்து
உயிரில் கலந்து
காதலின் சிறப்பாய்
அமைந்த அழகின் குடும்பம்
இதுவன்றோ...
பாசம் பொங்கி வழிகின்றது
புன்னகை பூத்துக் கிடக்கின்றது
நாம் இருவர்
நமக்கிருவர்
என்றாகி இருக்கிறது
 
மழலை சந்தோஷம்
மனதைக் கொள்ளை கொள்ள
வாழ்வின் அர்த்தம்
ஜொலிக்கின்றது
 
உங்கள் மனதோடும்
கேட்டுப்பாருங்கள்
உண்மையின் வடுக்களை
உரசிப்பாருங்கள்
குடும்பத்தின் அர்த்தம்
புதிதாய் புரியம்