காலம் கடப்பதால்
களவு சரியென்றாகுமா?
கற்பழிப்பு நிராகரிக்கப்படுமா?
எண்ணிப் பார்கமுடியாத
கேள்விக்கனைகள்
காதுவந்து சேர்கிறது
வேதனையில்
வெம்புகிறது மனம்
கலாச்சாரம்
கற்றுத்தந்த பாடம்
காலத்தால் மறக்கப்படுகின்றதா?
தவறுகளுக்கு
வலுசேர்க,
சொல்லும் காரணம்
இதுவா?
வண்ணக் கனவுக்கு
கருமை சேர்ப்பதா?
இல்லை,
கறுப்பு வெள்ளை கனவுக்கு
நிறம் சேர்பதா?
எதுவானாலும்
கனவுதானே...
மாற்றம் என்பதற்காய்
மொத்தமாய் மாறிவிட்ட
மானிடம்
பெண்ணிலும் மாற்றம்
ஆணிலும் மாற்றம்
முடிவு தெரியாத மாற்றம்...
என்ன சொல்ல?
இவர்கள் முடிவு
அவர்களிடமே......
இவர்கள் முடிவு
அவர்களிடமே......
