கலை தனில் சிறப்பு
இவள்
நளினம் சேர்த்து
நானம் கலந்து
அழகில் நிறைந்து
நிற்பதாலோ...
விழிகளில் கலந்த
பரதம்
பாதங்கள் பதமாய்
ஜதி போட
விரல்கள் கலை வடிவம்
சொல்ல
உன்
வதனம் வடிவாய்
வடிக்கிறது
பாவம் தனை
இமைகள் கொட்ட
சுவை சேர்க்கும் புருவங்கள்
இதழ்கள் புன்னகைக்க
கன்னங்கள் சகபாடிகள்
மொத்தத்தில்
உன்
அங்ககங்கள் அதனையும்
நடமிடும் பரதம்