சிந்தனை

என்னால் முடியும் என்பது தன்நம்பிக்கை என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்.

மாறல்கள்

வன்மம் இல்லா பிஞ்சு உள்ளம் 
பிறக்கும் பாலகன் மனது 
வளர்வது 
இவன் இவள் வளர்ச்சி மட்டுமா?


 சந்தையில் 
பரப்பிவிட்ட அத்தனையும் 
பார்வைப்புலம் 
வாங்க மறுப்பதில்லை 
வளர்ச்சிக்குள் 
திணிக்க மறுப்பதில்லை

 காலத்தின் மாற்றம் 
கட்டாய மாறலாக
 கருத்தாடல் கண்டுவிடலாம் 
காயாகமல் பிஞ்சுகள் 
பழுத்து விடலாமா? 

வேண்டம் உள்ளங்களே 
நான்கு சுவருக்குள் 
அந்தரங்கம் கிடக்கட்டும் 
அடுத்தவன் 
விழிகளிற்கு வழிசமைக்காதீர்