நீள வானம்
நீல வண்ணம் சுமந்து
தென்றல் கொண்டு தவழ
பட்சிகளின் பாட்டோடு
மயங்குகின்ற
மாலை வேளை
மறைக்கப்பட்ட சூரியன்
வருகைக்காய்
காத்துக்கிடக்கும் நிலவு
நிலவு
தரப்போகும் வெளிச்சம்
வெளிச்சத்தில்
நனையப்போகும் கடல்
கடலில்
அழகாய் தவழும் அலை
அலை
தாங்கிய நிழல்
ஒவ்வொன்றும்
இதயத்தின் ஓரத்தில்
நிழழாடும்
நிஜமான
அந்திநேர சங்கமங்கள்